Mon, Dec5, 2022

#Trending

புது வீடு வாங்கிய நடிகை யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி!

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் கார் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்தார்.

அந்த விபத்தில் அவருடைய தோழி வள்ளி செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

பாண்டிச்சேரியில் டின்னர் முடித்து விட்டு தனது நண்பர்களுடன் ஈசிஆர் வழியாக கார் ஓட்டிக் கொண்டு வந்த யாஷிகா ஆனந்த் எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதியதில் அந்த படு மோசமான விபத்து நிகழ்ந்தது.

அதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவரது தோழி வள்ளி செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி அறிந்த யாஷிகா மிகவும் மன வேதனை அடைந்தார்.

காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த்தால் இன்னமும் சரிவர நடக்க முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் தான் நடைபயிற்சி எல்லாம் மேற்கொண்டு வீடு திரும்பி உள்ளார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது நீண்ட நாள் கனவான புது வீட்டை வாங்கும் கனவை தற்போது நனவாக்கி உள்ளார். புது வீட்டிற்கு கிரக பிரவேஷம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

அந்த புது வீட்டுக்கு பூஜை போடும் வீடியோவில் கவர்ச்சியான உடையணிந்து அமர்ந்திருப்பது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடிகை யாஷிகாவின் தங்கை ஒசைன் ஆனந்த் தான் அவர் என்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது அக்காவுக்கு பதிலாக ஒசைன் கலக்கி வருகிறார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities