Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மனைவி கர்ப்பம், மாமியாருடன் உல்லாசம்..! இறுதியில் அதிர்ச்சி!

மாமியாருடன் உல்லாசம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேல்முருகன் (வயது 27). இவரது மனைவி பவித்ரா. திருமணமாகி ஓராண்டு ஆகிறது. தற்போது பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

பவித்ரா வேல்முருகனின் பெரியம்மா மகளான குமுதா (45) என்பவரின் மகள் ஆவார். உறவு முறையில் அக்காள் மகளை தான் வேல்முருகன் திருமணம் செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான பவித்ரா. வேப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளார். இதனால் அடிக்கடி அவரை பார்க்க வேல்முருகன் சென்று வந்துள்ளார்.

கடந்த 28-ந்தேதி வேல்முருகன் தனது மனைவியை பார்க்க வேப்பூரில் உள்ள அக்காள் குமுதா வீட்டுக்கு வந்தார். இந்நிலையில், இரவு 11.45 மணிக்கு வேல்முருகனின் தாய் மலர்க்கொடிக்கு பவித்ராவின் குடும்பத்தினர் போன் செய்து உங்கள் மகனுக்கு திடீரென உடல் நிலை சரியில்லை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, மலர்க்கொடி உறவினர்களுடன் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, அங்கு வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மலர்க்கொடி வேப்பூர் போலீசில் அளித்த புகாரில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து திருப்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன் முடிவில், வேல்முருகன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திட்டக்குடி காவல்துறையினர் பவித்ரா, அவரது தாய் குமுதாவிடம் தனித்தனியே தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, குமுதா தான் வேல்முருகனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

கொலை தொடர்பாக போலீசில் அவர் அளித்த வாக்கு மூலத்தில், தனது கணவர் ரவிச்சந்திரன் லாரி டிரைவர் ஆவார். மகள் பவித்ராவின் கணவர் வேல்முருகன் எனது சித்தியின் மகன் ஆவார்.

இந்த நிலையில் எனக்கும் வேல்முருகனுக்கும் இடையே திருமண உறவை மீறிய பழக்கம் உருவானது. கர்ப்பிணியாக உள்ள எனது மகள் என்னுடன் இருந்தார். இதனால் என்னை பார்க்க வரும் வேல்முருகனும் நானும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

கடந்த 28-ந்தேதி அதேபோன்று வேல்முருகன் எனது வீட்டுக்கு வந்தார். இரவு மதுபோதையில் இருந்த அவர், என்னை உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தார். ஆனால், நான் பக்கத்து அறையில் மகள் பவித்ரா விழித்துள்ளார். எனவே தற்போது வேண்டாம் என்று தெரிவித்தேன். இருப்பினும் அவர் என்னை வற்புறுத்தினார்.

இதனால், வேல்முருகனின் கழுத்தில் கையை வைத்து அழுத்தி தள்ளி விட்டேன். அதில் விழுந்தவர் பேச்சு மூச்சு எதுவும் இன்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், உடனடியாக ஒரு புடவையை எடுத்து வேல்முருகனின் கழுத்தில் மாட்டி, தூக்கில் தொங்குவது போன்று வைத்தேன். பின்னர் எனது மகள் பவித்ராவிடம் உனது கணவர் தூக்கில் தொங்குகிறார் என்று கூறி அழுதேன்.

இதையடுத்து எனது மகளும், நானும் சேர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள். ஏற்கனவே வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பின்னர் எதுவும் தெரியாதது போன்று இருந்தேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் சிக்கி கொண்டேன் என்று தெரிவித்தார். இதையடுத்து குமுதாவை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், பவித்ராவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, எனது தாய் குமுதா, கணவர் வேல்முருகன் ஆகியோர் அருகே உள்ள அறையில் தான் தூங்குவார்கள். உறவு முறையில் அக்காள், தம்பி என்பதால் அவர்கள் நடத்தை மீது சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.