முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்த யுவராஜ் சிங் அதில் ஜாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியல் இன மக்களை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது ஹரியானா மாநில காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இருப்பினும் கைது செய்த சில மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக யுவராஜ் சிங் கூறியதை அடுத்து அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.